வு டெலிவிஷன்ஸ் நிறுவனம், இந்தியாவில் 65 இன்ச் ஸ்மார்ட் டிவியினை வெளியிட்டுள்ளது, இந்த வு நிறுவனத்தின் 65 இன்ச் ஸ்மார்ட் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
வு 65 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.
மேலும் இது 4கே டிஸ்பிளே ஆதரவினைக் கொண்டதாகவும், 3,840×2,160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், 400 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்த வு டிவி டைட்டானியம் க்ரே சவுண்ட்பார் மற்றும் பெஸல்லெஸ் ஃப்ரேம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 100W சினிமா ஸ்பீக்கர் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்களைக் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவியானது HDR10 ஆதரவு மற்றும் டால்பி விஷன் அம்சங்களைக் கொண்டதாகவும், 65 பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி கொண்டதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், இயர்போன் ஜாக் மற்றும் ஆர்.ஜே 45 போர்ட் கொண்டுள்ளது.