நோக்கியா மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இணைந்து மலேசியாவில் 65 இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
நோக்கியா 65 இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வருகிறது.
மேலும் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி 65 இன்ச் அளவில் ஆனதாகவும், மேலும் 2840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 480nits பிரைட்நஸ் வசதியினையும் சிறந்த பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.

இந்த 65 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷந் வசதி உள்ளது. மேலும் 450எம்பி4 ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் 1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் மாலி 450எம்பி4 ஜிபியு ஆதரவினைக் கொண்டு உள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை ஸ்மார்ட் டிவியில் 2.25ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும்,24வாட் ஸ்பீக்கர் ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் டி.டி.எஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் ஜேபிஎல் ஸ்பீக்கர் வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11, புளூடூத் 5.0, 3 எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், ஈதர்நெட் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.