நோக்கியா நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது, மேலும் இந்த டிவியானது ப்ளிப்கார்ட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சமீபத்தில் 5.3 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவியானது டிசம்பர் வாக்கில் அறிமுகமானது, இந்த டிவியானது எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.
தற்போது நோக்கியா நிறுவனங்களின் டிவிக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மி நிறுவனம் புதிய 65 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. மி 65 இன்ச் ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை- ரூ.45,900
அதாவது இந்த 65 இன்ச் ஸ்மார்ட் டிவியானது 10+ ஆதரவினைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான சேமிப்பு வசதியையும், ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இது எச்டிஆர் 10+ ஐ ஆதரவுடன் 4கே ரெசல்யூஷன் எம்இஎம்சி ஆதரவு, வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த டிவியில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ், யூடியூப், கூகுள் பிளே போன்ற பயன்பாடுகள் இருக்கும் என்றும், இரண்டு 10W ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டிருப்பதாய் உள்ளது.