ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தன்பக்கம் முழுவதுமாக ஈர்க்க அதிரடியான பிளான்களோடு கால்பதித்தது. கால், டேட்டா என அனைத்தையும் இலவசமாக வழங்கியது.
ஜியோ வழங்கிய அசத்தலான டேட்டா ஆஃபர்கள், அன்லிமிட்டட் கால்கள், அதிக நாள் வேலிடிட்டி என அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்றது. இதன்மூலம் ஏர்டெல், ஐடியா, ஏர்செல், வோடபோன் போன்ற அனைத்து நெட்வொர்க்குகளை பின்னுக்குத் தள்ளி அசத்தியது.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மற்ற ஜியோ தன்னுடைய ரிங்க் ஆகும் கால அளவினைக் குறைத்து உள்ளது. அது சர்ச்சைக்கு ஆளாக, அதற்கு விளக்கம் கொடுத்து சமாளித்தார் அம்பானி.

தற்போது அதிர்ச்சியளிக்கும்விதமாக ஒரு நிமிடத்திற்கான அவுட்-கோயிங் அழைப்புக்கான கட்டணத்தை அறிவித்துள்ளது.
அதாவது ஒரு நிமிட அவுட் கோயிங் காலுக்கு 6 பைசா கட்டணமாகும். அந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
ஜியோ வாடிக்கையாளர்கள் இதனா கடுப்பாகிப் போய் உள்ளனர், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.