சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 3,17,298 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 13,642 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.
சீனாவைத் தாண்டி இத்தாலி, பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மிக முக்கியமான பல நிகழ்வுகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.

ஐபோன் எஸ்.இ. 2, ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிகழ்வானது, மார்ச் 31 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல் புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில், கொரோனா காரணமாக இதன் உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதனால், 5ஜி ஐபோன் மாடலின் உற்பத்தி பணிகள் மே மாதம் துவங்கும் என்று வெளியான தகவலை மறுக்கும் வகையில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தகவலைக் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் திறக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்கும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் பயனர்கள் ஐபோன் 5 ஜி ஸ்மார்ட்போன் குறித்து எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டுள்ளனர்.