ஜியோ நிறுவனம் ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா என்ற அளவில் அடுத்த பிளானை அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா வரையிலான பிளான்கள் மட்டுமே இருந்து வந்தது. 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா பெற முடியும்.
ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா பிளானின் கட்டணம் 509 ரூபாயாகும். மொத்தம் 28 நாட்களுக்கு 112 ஜிபி வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவான 4ஜிபி காலியானதும், இணையத்தின் வேகம்ண 64 Kbps ஆக குறைக்கப்படும். மேலும், தினசரி 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால், இலவச ஜியோ ஆப் சந்தாவும் வழங்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா பிளானின் கட்டணம் 799 ரூபாயாகும். இது தான் ஜியோவில் உள்ள அதிகபட்ச டேட்டா பிளான் ஆகும். ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா, வீதம் 28 நாட்களுக்கு 140 ஜிபி வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவான 4ஜிபி காலியானதும், இணையத்தின் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். மேலும், மற்ற பிளானைப் போலவே தினசரி 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால், இலவச ஜியோ ஆப் சந்தாவும் வழங்கப்படுகிறது.