இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவியது. அந்தவகையில் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட 59 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்ய, அதன்படி சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
அந்தவகையில் தற்போது இந்திய மக்களின் தனியுரிமை, இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு யினைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்போது மீண்டும் 49 செயலிகளை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த 43 செயலிகள் குறித்த பட்டியலையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சம்மேளனத்தையும் வெளியிட்டுள்ளது.