Gadgets

தாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி!

இந்தியாவில் தாம்சன் நிறுவனம் அதன் ஸ்மார்ட் டிவி மாடலினை 42 இன்ச் அளவுகளில் வெளியிட்டுள்ளது. 42 இன்ச் டிவியானது PATH212 மாடல் எண் கொண்டுள்ளது.

தாம்சன் பாத் 42 இன்ச் ஸ்மார்ட் டிவியானது ஆண்ட்ராய்டு டிவி 9பை இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது கூகுள் அசிஸ்டென்ட்டிற்கான ஆதரவு கொண்டுள்ளது.

இது 1.4GHz ARM கார்டெக்ஸ்-ஏ 53 குவாட் கோர் ப்ராசஸர் உடனாக மாலி -450 எம்.பி 3 ஜி.பீ.யுவைக் கொண்டதாகவும், மேலும் அம்லோஜிக் சிப்செட் கொண்டுள்ளது.

தாம்சன் நிறுவனம் வெளியிட்டுள்ள 42 இன்ச் ஸ்மார்ட் டிவி!

இந்த டிவியானது 1,920 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் 178 டிகிரி பார்வை கோணத்தைக் கொண்டதாக உள்ளது.

இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீதத்தினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

42 இன்ச் ஸ்மார்ட் டிவியானது இரண்டு ஏ.வி. போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி 2.0 போர்ட்கள், இரண்டு எச்.டி.எம்.ஐ 2.0 போர்ட்கள், ஆப்டிகல் இன்புட், ஈதர்நெட் போர்ட், ஆர்.எஃப் இன்புட், லைன் இன்புட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆடியோ ஜாக் வசதியினைக் கொண்டதாகவும், 42 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கர் கொண்டதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் வாட்ச்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியாகியுள்ள அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

வீடியோ அழைப்புகளுக்கான திறன் கொண்ட Huawei Smart Screen V55i TV அறிமுகம்!

TechNews Tamil