பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக பயனர்களைக் கொண்ட நிறுவனம் வாட்ஸ் அப் ஆகும். ஒரு காலத்தில் மெசேஜ் பயன்பாட்டினை குறுந்தகவல்களை அனுப்ப பயன்படுத்திய பயனர்கள் தற்போது வாட்ஸ் ஆப்பினை முழுவதுமாக நம்பி உள்ளனர்.
வாட்ஸ் அப் மற்ற அப்களை விட எளிதில் பிரபலமாகக் காரணம், பயன்படுத்தும் முறை மிக எளிதானது என்பதாலேயே ஆகும்.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் பிரதமர் மோடி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் டிவி பார்ப்பது, இணையத்தினை பயன்படுத்துவது எனப் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
டிவி பார்ப்போரைவிட, இணையத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்பின் பயன்பாடானது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஜனவரி மாதத் துவக்கத்தில் அமெரிக்காவில் அதிகரித்த இதன் பயன்பாடானது, தற்போது இந்தியாவில் வேறு லெவலாக அதிகரித்துள்ளது.