பொதுவாக இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.விகளுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து உள்ளது.
டி.வி.யில் மட்டுமல்லாது கூடுதலாக, அதில் உள்ள பல கருவிகள் மீதும் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அதையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து ஆலோசித்து வந்தது, தற்போது இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி.க்கள் மீதான 5 சதவிகித வரி நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இறக்குமதி வரி நீக்கப்பட்டதால் தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி விற்பனையாளர்கள் இதுகுறித்து வரவேற்பு அளித்துள்ளனர்.
இதன்மூலம் எல்.இ.டி. டி.வி.யின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாங்குவோர் அனைவரும் இந்தக் கட்டணத்தில் வாங்க பேரார்வத்தில் உள்ளனர்.
நிறைய பேர் எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்கவும் அதிக அளவில் முன்பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதன்மூலம் அனைத்து டிவிக்களும் இனி 4 சதவீதம் விலை குறைப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.