ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் JioPOS லைட் என்ற புதிய பயன்பாட்டுச் செயலியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த செயலியின் மூலம் மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்து, கமிஷனை தொகையைப் பெற முடியும்.
இந்த JioPOS லைட் ஆப்பினை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்ட்லோடு செய்ய வேண்டும். இந்த செயலில் வழக்கமான் ஆப்களைப் போல் ஒரு அக்கௌண்ட் ஓப்பன் செய்ய வேண்டும், அப்போதுதான் நமக்கான அக்கௌண்டிலிருந்து மற்றவர்களுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும்.
அதாவது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்கள் பலரும் ரீசார்ஜ் செய்ய ஆஃப்லைன் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யாதவர்கள், ஏடிஎம் மையங்களில் ரீசார்ஜ் செய்யும் முறையின் மூலம் ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.

இந்த வகைகளில் ரீசார்ஜ் செய்ய முடியாமல் உள்ள மக்களுக்கு ஜியோ இந்த கமிஷன் தொகையினை வழங்குகிறது. JioPOS செயலி மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 4.16% கமிஷனை வழங்குகிறது.
மேலும் பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பதையும் JioPOS பயன்பாடு மூலம் செய்யலாம். முதலில் இந்த செயலியில் பதிவு செய்து JioPOS அக்கௌன்ட்டை உருவாக்கிய பின்னர், உங்கள் கணக்கில் இருக்கும் மனி வேலட்டில் ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 என ஏதேனும் தொகை மாற்றம் செய்ய வேண்டும்.