ஜியோ வந்ததும்போதும் மற்ற நெட்வொர்க்குகள் வேறு வழியில்லாமல் ஆஃபர்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏர்டெல், வோடபோன் தினம் தோறும் ஏதாவது ஆஃபர்களை வழங்கிவருவது வழக்கமாகிவிட்டது.
பி.எஸ்.என்.எல் உம் தற்போது உள்ள நிலைமையினை சமாளிக்க போராடி வருகிறது. தற்போது தினசரிக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் பிளானை கொண்டுவந்துள்ளது.
அதாவது ரூ. 186, ரூ. 187, ரூ. 153, ரூ. 118, ரூ. 192 ப்ரீபெய்ட் பிளான்களுக்கு தினமுன் 3ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.

இந்த 5 பிளான்களும் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கின, தற்போது 1ஜிபி கூடுதலாக சேர்க்கப்பட்டு இனி 3 ஜிபி டேட்டாவாக வழங்கும். இதன் வேலிடிட்டி 28 நாட்களாகும்.
நிச்சயம் இந்தப் பிளான்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.