பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் புதிய ரூ.1,999 திட்டத்தை சேர்த்துள்ளது.
இந்த திட்டத்தில் 33 ஜிபி அளவிலான டேட்டாவானது 100 எம்.பி.பி.எஸ் வேகத்தினைக் கொண்டதாக இருக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தி உள்ளது. வரம்பு முடிந்த பின்னரே இந்த வேகமானது 4 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.
டேட்டா நன்மைகளுடன் கூடுதலாக, இந்த ரூ.1,999 பாரத் ஃபைபர் திட்டமானது கால் அழைப்புகளை இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஏர்டெல் மற்றும் ஜியோவின் சேவையினை முறியடிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும், ஆனால் இந்தத் திட்டத்தில் இணைய வேகம் குறைவானதாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
இதன் வேகத்தினை அதிகரித்து, 250 எம்.பி.பி.எஸ் அளவிலான டேட்டா அளவு வழங்கப்படுதல் வேண்டும். இல்லையேல் இது பெரிய அளவிலான வியாபரத்தினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் இன் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டமான ரூ.16,999 திட்டத்தின் அதிகபட்ச வேகம் 100 எம்.பி.பி.எஸ் ஆகும்.
இதனால் பிஎஸ்என்எல் அதன் வேகத்தினை அதிகரிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.