ஏர்டெல் அதன் 32 ஜிபி அளவிலான போனஸ் டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது. ஏர்டெல் ஜியோவிற்கு ஈடுகொடுக்க, பல திட்டங்களை வழங்கிவருகிறது. இதில் இதற்கு முன்னதாக ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களுக்களில் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது கூடுதலாக தனது போனஸ் டேட்டா திட்டத்தினை ரூ.558, ரூ.509 மற்றும் ரூ.499 ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 400MB அளவிலான கூடுதல் டேட்டாவை இலவசமாக பெறமுடியும்.

ரூ.499 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்துடன் தினமும் 250 எம்பி அளவிலான போனஸ் டேட்டாவை இலவசமாக பெறலாம்.
போனஸ் டேட்டாவை விடுத்து, ரூ.558 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஒருநாளுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா பெறமுடியும். இதன் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும்.
ரூ.499 திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். போனஸ் டேட்டாவை பெற, இந்த ரீசார்ஜை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் மூலமே செய்ய வேண்டும்.
இப்படி ரீசார்ஜ் செய்தால் 32 ஜிபி அளவிலான இலவச டேட்டா கிடைக்கும். அதாவது நாள் ஒன்றிற்கு 250 எம்பி அளவிலான கூடுதல் டேட்டாவிற்கு 82 நாட்கள் வேலிடிட்டி.