Gadgets

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள 32-இன்ச் Mi TV Pro E32S ஸ்மார்ட் டிவி!!

சியோமி நிறுவனம் தற்போது 32-இன்ச் Mi TV Pro E32S ஸ்மார்ட் டிவியினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சியோமி டிவியானது உலகின் பல படங்களில் ஜூன் மாதத் துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் டிவியானது 32 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ள 32-இன்ச் Mi TV Pro E32S ஸ்மார்ட் டிவி!!

சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் டிவியானது குவாட் கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-53 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட பேட்ச்வால் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, இது XiaoAI அசிஸ்டெண்ட் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இந்த டிவியானது புளூடூத் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் 12கே ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த டிவியின் ஆடியோ தரமானது, 6W ஸ்பீக்கர்கள் மற்றும் அதன் டிடிஎஸ் டிகோடர் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி போர்ட், ஒரு ஏ.வி உள்ளீடு, ஒரு எஸ்.பி.டி.எஃப் போர்ட், ஒரு ஆண்டெனா போர்ட், புளூடூத் 4.0 மற்றும் வைஃபை போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8+ டேப்லெட்!

TechNews Tamil

இளைஞர்களைக் கவரும் வகையில் வெளியான கேமிங் இயர்போன்.!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியுள்ள ஆசஸ் விவோபுக் ப்ரோ 14 லேப்டாப்!

TechNews Tamil