Mobile

இந்தியாவில் அறிமுகமான 3 ஒப்போ சீரியஸ் போன்கள்!

ஒப்போ நிறுவனம் நேற்று  இந்தியாவில் அதன் ஒப்போ ரெனோ 2 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

அதாவது ஒப்போ ரெனோ 2, ஒப்போ ரெனோ 2Z மற்றும் ஒப்போ ரெனோ 2F ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. 

ஒப்போ ரெனோ 2 இல் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 5x ஹைப்ரிட் ஸூம் மற்றும் 20x டிஜிட்டல் ஸூம் கொண்ட க்வாட்-கேமரா அமைப்பு மற்றும் க்வால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட் போன்றவையும் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமான 3 ஒப்போ சீரியஸ் போன்கள்!

மேலும் ஒப்போ ரெனோ 2Z மற்றும் ஒப்போ ரெனோ 2F இல் AMOLED பேனல் மற்றும் க்வாட் கேமரா அமைப்பு போன்றவையும் உள்ளது.

இந்தியாவில் ஒப்போ ரெனோ 2 ஆனது ரூ.36,990-க்கு அறிமுகமாகி உள்ளது. ஒப்போ ரெனோ 2Z ஆனது ரூ.29,990-க்கு அறிமுகமாகி உள்ளது.

ஒப்போ ரெனோ 2 வின் விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் வரவுள்ளது, மேலும் ஒப்போ ரெனோ 2Z வின் விற்பனை செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் வரவுள்ளது.

Related posts

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

லெனோவொ டேப் V7ன் சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil