Information Technology

விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 23 மில்லியன் டாலர் மதிப்புள்ள கழிப்பறை!!

நாசா விண்வெளி வீரர்களை நிலவில் பல மாதங்கள் தங்க வைத்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது, அதாவது 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை அங்கு தங்கவைத்து அதுகுறித்த ஆராய்ச்சியினை செய்ய உள்ளது.

நிலவில் மனிதர்களைத் தங்கவைக்கும் பொருட்டு, விண்வெளி செல்லவுள்ள வீரர்களுக்கு பல லட்சக் கணக்கில் செலவிட்டு அவர்களுக்கு முறையான பயிற்சியளித்து தயார் செய்து வருகிறது.

அதாவது  நிலவில் தங்குதல், விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி என பல கோடிகளைச் செலவிட்டு வரும் நாசா தற்போது அங்கு தங்கவுள்ள வீரர்கள் பயன்படுத்த ரூ23 மில்லியன் டாலர் மதிப்பில் கழிப்பறையினைத் தயார் செய்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தில் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கவும் திட்டமிட்டுள்ளது நாசா. இதற்கு முன்னர் சந்திரனில் மனித கழிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்த சந்திர லூவிவை விட இது சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ள நிலையில் விண்வெளி கழிவறைகளை கண்டுபிடிக்க பரிசுப் போட்டியினை அறிவித்தது.

சந்திரனின் ஈர்ப்பு விசையில் உருவாக்கப்பட்ட இந்த கழிப்பறை ஜீரோ க்ராவிட்டி கழிவறை என்று அழைக்கப்படுகின்றது.

Related posts

ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதியினை அறிமுகம் செய்த ஏர்டெல்!!

TechNews Tamil

ரெட்மி நோட் 8 இன் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

ஜியோவுக்கு போட்டியாக BSNL வழங்கிய கூடுதல் டேட்டாக்கள்!

TechNews Tamil