இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தினை செயல்படுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ சிவன் கூறியுள்ளார்.
இந்தத் திட்டம் மட்டுமல்லாது 10 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி இந்தியா சாதனை செய்ய காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதாவது ககன்யான் திட்டத்தின் மூலம் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள், மேலும் விண்பயிற்சி சோதனைகளுக்காக ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பப்பட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதன் பொருட்டே, 6 ஆய்வு மையங்கள் உருவாக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு சந்திராயான் 2 நிலவினை நெருங்கிய போதும், வேகமாக தரையிறங்கியதால் வெற்றிகரமானதாக அமையாமல் போனது.
தற்போது செயல்பட்டு வரும் ஆர்பிட்டர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பும் நிலையில், சந்திராயான்- 3க்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்துடன் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவது குறித்த தகவலையும் சிவன் வெளியிட்டு உள்ளார்.