ஹானர் 20 ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியாகி, சிறப்பான வரவேற்பினைப் பெற்று வருகிறது.
தற்போது இந்த ஹானர் 20 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தள்ளுபடி ஆஃபரானது நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
- ஹானர் 20 ஸ்மார்ட்போனின் பழைய விலை – ரூ.24,999
- ஹானர் 20 ஸ்மார்ட்போனின் ஆஃபர் விலை – ரூ.22,999 (ரூ.2000 விலைகுறைப்பு)
இந்த ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. இந்த ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இது ஹிசிலிக்கான் கிரீன் 980 பிராசஸர் கொண்டு இயங்குகிறது. கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 16 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா போன்றவைகள் உள்ளன.
மேலும் முன்புறத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 3750 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.