Information Technology

ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் லேனில் நுழைந்தவர்களுக்கு 20 கோடி அபராதம்!

 நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு டிசம்பர் முதல் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனி ஃபாஸ்டேக் முறைப்படி மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாமல் செல்பவர்களுக்குக் கட்டணத்துடன் அபராதமும் அவர்கள் கணக்கில் இருந்து வசூலிக்கப்படும்  என்றும் அறிவித்து இருந்தது.

மத்திய அரசு பலமுறை அறிவித்த போதிலும், ஃபாஸ்டேக்கினை வாங்கிப் பயன்படுத்தாமல் வாகன ஓட்டிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைபவர்களுக்கு அபராத்ததினை டோல்கேட்டில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் லேனில் நுழைந்தவர்களுக்கு 20 கோடி அபராதம்!

சமீபத்தில் வெளியான தகவலின்படி, 18 லட்சம் வாகன ஓட்டுநர்கள் ஃபாஸ்டேக் இல்லாமல் பயணித்ததாகவும், மேலும் இவர்களிடம் இதுவரை 20 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் NHAI புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஃபாஸ்ட்டேக் இல்லாமல், ஃபாஸ்டாக் பாதையில் பயணிப்பவர்களுக்கு டிசம்பர் மாதம் அபராதத்தை விதித்ததையடுத்து ஏறக்குறைய 3 மாதங்களில் 20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சிகரமான விஷயமாகவே பேசப்படுகிறது.

பிப்ரவரி 29 ஆம் தேதி வரை, ஃபாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த இலவச ஃபாஸ்டேக்கினைப் பெற வேண்டும் எனில், நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள், போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் பம்புகள் போன்ற இடங்களில் ஆர்.சியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

கொரானோ வைரஸால் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து!!

TechNews Tamil

வாட்ஸ் அப்பில் போட்டோவை மாத்தி அனுப்புபவரா.. உங்களுக்கான அப்டேட்..

TechNews Tamil

விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி!!

TechNews Tamil