Mobile

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

இந்தியாவில் 6ஜிபி வேரியண்ட் கொண்ட போகோ எப்1 ஸ்மார்ட்போனின் விலை 17,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான போகோ எப் 1 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை 22,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பின்னர், இதன் விலை 20,999 ரூபாயாக குறைக்கப்பட்டது. ஆனால், மற்ற ரேம் வேரியண்ட்டின் விலை குறைக்கப்படவில்லை. 

போகோ ஸ்மார்ட்போனுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம்வரை தள்ளுபடி!

இந்த நிலையில், தற்போது 6ஜிபி ரேம், 64 ஜிபி வேரியண்ட் மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை 19,999 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இப்போது 2 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 17,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை mi.com மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கிக் கொள்ளலாம். 

இதற்கு முன்பு பிளிப்கார்ட்டில் மொபைல்ஸ் போனாஸா ஆஃபர் மற்றும், எம்ஐ சூப்பர் சேல் விற்பனை செய்யப்பட்டது. அப்போதே போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு இதே 17,999 ரூபாய் விலை தான் ஆஃபராக வழங்கப்பட்டது. மேலும், கூடுதலாக 3,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத உடனடி சலுகையும் வழங்கப்பட்டது. 

Related posts

வெளியானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் மோட்டோ ஜி62 5ஜி!

TechNews Tamil

டிசம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள Vivo X30 Pro!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியது போக்கோ சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil