வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது இரண்டு சிறப்பான அம்சங்களை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நோட்டிபிக்கேஷன் பகுதியில் Mute Always என்ற ஆப்ஷன் வரவுள்ளது.

அதாவது இதுவரை மியூட் ஆப்சனின் காலக்கெடுவானது அதிகபட்சமாக ஒரு வருடமாக இருந்தது. ஆனால் தற்போது இது நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆயுட்காலம் முழுவதும் தனி நபர் சாட்டினையோ அல்லது குரூப் சாட்டினையோ முழுவதுமாக Mute Always செய்யலாம்.
இது பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும் என்று தெரிகிறது. மேலும் அத்துடன் மெசேஜ் எக்ஸ்பைரி என்ற ஆப்ஷனும் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நாம் மெசேஜ் அனுப்பும் போது தேதி, நேரத்தை செட் செய்தால் அந்த நேரம் முடிந்த பின்னர் மெசேஜ் ஆனது தானாக டெலிட் ஆகிவிடும். வாட்ஸ் ஆப்பில் வரவுள்ள இந்த அம்சமும் பயனர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து இருக்கும் அம்சமாகும்.