பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.
இந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி இதனைத் தடை செய்தது.
ஆனாலும் இளைஞர்களை இதன் பிடியில் இருந்து மீட்க முடியவில்லை, இந்த நிலையில் சமீபத்தில் புதிய இடங்கள், புதிய சாலைகள் மற்றும் புதிய வளங்கள் போன்றவற்றுடன் மிராடோ என்ற புதிய காரும் அத்துடன் புதிய ரேஸ் டிராக் சேர்க்கப்பட்டு பப்ஜி கேம் ஆனது 0.18.0 அப்டேட்டுடன் வெளியிடப்பட்டது.

தற்போது இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தினைச் சார்ந்த 16 வயது சிறுவன் ஊரடங்கு காலத்தில் முழுவதுமாக பப்ஜி விளையாட்டில் செலவிட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் தண்ணீர், உணவு என எதையும் எடுத்துக் கொள்ளாமல் பப்ஜி விளையாட்டிலேயே கவனம் செலுத்தியுள்ளான். மேலும் விளையாட்டின் போது சிறுவனின் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான்.
அதன்பின்னர் அவரது பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வர, அதன்பின்னர் சிறுவனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டு 2 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.