ஆப்பிள் நிறுவனம் நவம்பர் மாதம் புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்தது.
- புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ விலை – ரூ. 1,99,900
இந்த புதிய மேக்புக் ப்ரோ மாடலில் புதிய வடிவிலான கீபோர்டு கொண்டதாக உள்ளது. 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் இருந்து 80 சதவீதம் வரை மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை இன்று துவங்கியுள்ளது.
அமேசான் இணையதளத்தில் 10000 ரூபாய் விலைகுறைக்கப்பட்டு 16 இன்ச் மேக்புக் ப்ரோ ரூ. 1,89,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் கோர் ஐ9 வேரியண்ட் ரூ. 2,29,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பல ஆஃபர்களை இந்த ஸ்மார்ட்போன் வழங்கியுள்ளது, மேலும் இது வட்டியில்லா மாத தவணை முறை வசதியையும் வழங்கியுளது.
ஆக்சிஸ் மற்றும் ஹெஸ்டிஎஃப்சி வங்கி கார்டுகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த மாடல் ஆனது 3072×1920 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை டச் ஐ.டி. கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.