ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் ஐபோன் பிரியர்கள் பலரும் இந்த விலை குறைப்பினால் மகிழ்ந்து போய் உள்ளனர். அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல, 10000 வரையிலான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னதாக ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்களை அறிமுகம்
செய்தது.
அப்போது அந்த விழாவில் சில ஐபோன்களின் விலையினை குறைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதில் ஏற்கனவே ஐபோன் XS 64GB ரூ.99,900 க்கு விற்பனையான ஸ்மார்ட்போன் தற்போது ரூ.89,900-க்கு விற்கப்படும் என்று தெரிகிறது.
ஐபோன் XS 256GB ரூ.1,14,900 க்கு விற்பனையான ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,03,900-க்கு விற்கப்படுகிறது.
ஐபோன் XR 64GB ரூ.59,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 10000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.49,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் XR 128GB ரூ.64,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 10000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.54,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் 8 Plus 64GB ரூ.69,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 20000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.49,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் 8 64GB ரூ.59,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 20000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.39,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் 7 Plus 32GB ரூ.49,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 12000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.37,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் 7 Plus 128GB ரூ.59,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 17000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.42,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் 7 32GB ரூ.39,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 10000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.29,900 க்கு விற்பனையாகவுள்ளது.
ஐபோன் 7 128GB ரூ.49,900 என்ற விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்போன், 15000 ரூபாய் தள்ளுபடியுடன் தற்போது ரூ.34,900 க்கு விற்பனையாகவுள்ளது.