டெல்கோவின்
பிராட்பேண்ட் திட்டங்களில் மாதத்திற்கு 1000ஜிபி வரை இலவசமாக டேட்டாவை வழங்கியுள்ளது ஏர்டெல் வி பைபர். இதில் வாய்ஸ்
கால், அமோசன் பிரைம், நெட்பிக்ஸ்
உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கியுள்ளது.
இப்போது கூடுதல் டேட்டாவுடன் வழங்கப்படும் ஏர்டெல் அடிப்படை திட்டம் ரூ.799, ஏர்டெல் என்டர்டெயின்மென்ட் திட்டம் ரூ.1099, ஏர்டெல் பிரீமியம் திட்ட விலை ரூ.1599 புதிய கூடுதல் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக ஏர்டெல் அடிப்படை திட்டம் ரூ.799 ஆகும்.

இந்த ரூ.799 பிளானுக்கு 100ஜிபி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு 200 ஜிபிக்கு மேல் டேட்டா வழங்கப்படுகின்றது. இதை நாம் 6 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டம் 40Mbps வேகம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள், ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தா உள்ளிட்டவைகளைம் ஏர்டெல் வழங்கி வருகின்றது.
ஏர்டெல் என்டர்டெயின்மென்ட் திட்டத்திற்கு ரூ. 1,099, இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். 500 ஜிபி கூடுதல் தரவுடன் வருகிறது. இந்த திட்டம் முதலில் 300 ஜிபி தரவு, 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் அமேசான் பிரைம் சந்தா, நெட்ஃபிக்ஸ் சந்தா, ஜீ 5 பிரீமியம் சந்தா மற்றும் ஏர்டெல் டிவி பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் பிரீமியம் திட்டத்தின் விலை ரூ. 1,599 ஆகும். இது 1000 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.