Information Technology

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

ஆதார் அட்டை இந்தியாவில் அறிமுகமான பின்னர், ஆதார் எண்ணை நமது வங்கிக் கணக்கு, கேஸ் சிலிண்டர் கணக்கு என பலவற்றுடனும் இணைக்கக் கோரி வருகிறது மத்திய அரசாங்கம்.

அதாவது பான் எண் எனப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி என்று அறிவித்து இருந்தது.ஆனால் அதற்குபின் இந்தக் காலக் கெடுவானது மீண்டும் நீட்டிக்கப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக் கெடுவானது மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

இந்த காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதிக்குள் மீண்டும் மாற்றி அமைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

தற்போது மத்திய அரசாங்கம் மற்றுமொரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது குறித்த காலக் கெடுவுக்குள் ஆதாரை பாண் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டையானது செயலற்றதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன் அடுத்தகட்டமாக இந்த செயலற்ற பான் எண்ணை பயன்படுத்துபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதனுடன் கூடுதலாக வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் பான் எண்ணை பயன்படுத்துவது குற்றம் என்றும் கூறியுள்ளது.

Related posts

சாம்சங்க்: டிவி, பிரிட்ஜ் என அனைத்துப் பொருட்களுக்கும் விலை குறைப்பு!

TechNews Tamil

ஜியோவில் இனி 1 நிமிட அவுட்கோயிங்க் காலுக்கு 6 பைசா!!

TechNews Tamil

ஏர்டெலில் ஃப்ரீ எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ்!

TechNews Tamil