கடந்த ஒரு வாரமாக இந்தியா மற்றும் சீனா எல்லையில் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா- சீனா எல்லையில் உள்ள பிரச்சினையினை சமாதானம் செய்ய அமெரிக்கா முடிவு எடுத்த நிலையிலும், இரு நாடுகளும் தங்களது இராணுவப் படைகளை பெரிய அளவில் எல்லையில் குவித்துள்ளது.
இதனால் போர் அபாயம் ஏற்படுமோ என்ற பயம் இருநாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள மக்களிடையே நிலவி வருகின்றது. ஏற்கனவே சீனா ஏற்படுத்திய கொரோனாவால் இந்தியா படாதபாடு பட்டுவரும் நிலையில், எல்லைப் பிரச்சினையாலும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது.
இதனால் இந்தியாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனமானது ஸ்மார்ட்போனிலிருந்து சீன ஆப்ஸ்களை நீக்க உதவும் ஒரு அருமையான ஆப் வசதியை உருவாக்கியுள்ளது.

அதாவது ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து சீன ஆப்களையும் இந்த ஒரே ஆப் மூலம் டெலிட் செய்யலாம். இந்த ஆப் தற்போதுவரை 1மில்லியன் பதிவிறக்கத்தைப் பெற்றுள்ளது.
Remove China Apps என்ற இந்த ஆப் தற்போது இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையால் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஆப்பினை இந்தியாவில் மட்டுமல்லாது இன்ன பிற நாடுகளிலும் பலரும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.