Apps

இந்தியாவுக்கு வீடியோ கான்ஃபரென்சிங் செயலி உருவாக்குவோருக்கு 1 கோடி பரிசு… இந்திய அரசு அறிவிப்பு!!

ஜூம் செயலியில் ஏற்பட்ட பாதுகாப்பின்மை பிரச்சினை காரணமாக ஜூம் செயலியானது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போது இதுபோன்ற ஒரு செயலிக்கு முக்கிய தேவை இருப்பதால், மத்திய அரசு டெவலப்பர்களுக்கு போட்டி என்பது போன்ற சவாலை உருவாக்கி புதிய செயலி ஒன்றினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது

அதாவது இன்னோவேஷன் சேலஞ்ச் என்னும் இந்தப் போட்டியானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வீடியோ கான்ஃபரென்சிங் செயலி உருவாக்குவோருக்கு 1 கோடி பரிசு… இந்திய அரசு அறிவிப்பு!!

அதாவது இந்தியாவிற்கென்று வீடியோ கான்ஃபரென்சிங் செயலியினை உருவாக்குவோருக்கு ரூ. 1 கோடி பரிசு தொகையாக வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் மென்பொருள் துறையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தேர்வு ஆகும் நபர்களில் 10 பேர் கொண்ட குழுக்களை கொண்டு இந்த செயலியினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

வெற்றி பெறும் குழுவானது செயலிக்கான பராமரிப்பு பணிகளை  வருடத்திற்கு வழங்க வேண்டும் என்றும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ போர்ட்டலான டிஜிட்டல் இந்தியாவில் அப்ளை செய்ய வேண்டும்.

Related posts

ட்விட்டரில் ரீட்விட் செய்யும் போது கருத்துகளை பதிவிடலாம்!!

TechNews Tamil

டிக் டாக் செயலிக்குப் போட்டியாக Zee5 செயலி!!

TechNews Tamil

டிக் டாக்கிற்கு கடும் சவால்: 1 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்துள்ள மித்ரன் செயலி!!

TechNews Tamil