ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவினை 224 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகையானது புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லப்பட்டது.
ஏர்டெல் வலைத்தளத்தின்படி புதிய பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் என்ற தகவல் வெளியானதும் வைரலாகி உள்ளது, மேலும் இதற்கு ஈடுகட்ட ஜியோ என்ன ஆஃபர் வழங்கு, என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துவருகிறது.

4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தில் ஏர்டெல் சிம் போட்ட 48 மணி நேரத்தில் கூடுதல் டேட்டா பயனர் கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு 84 நாட்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்தது. ஜூலை மாதத்தில் 4ஜி ஹாட்ஸ்பாட் வாங்கும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது.
பி.எஸ்.என்.எல் லும் புதுபுது திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை முறியடிக்கவே ஏர்டெல் இந்த ஆஃபரை வழங்கியதாகத் தெரிகிறது.