Apps

ஸ்மார்ட்போன்களை பாதித்த வாட்ஸ்அப் வைரஸ்!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் பேங்க் ஆப் முதல் சமையல் வரை அனைத்து ஆப்களுமே உள்ளன, அப்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால், அனைவரும் கூகிளில் தேடுவதைவிட தனிப்பட்ட ரீதியில் ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் அனைத்தும் நம்பகத்தன்மையானவை கிடையாது. அதில் பல மோசடிக்காரர்களின் அப்கள் உள்ளன. இதன் மூலம் தகவல்கள், வங்கிக்கணக்குகள் உள்ளிட்டவை ஹேக்கர்களிடம் சென்று விடுகிறது. 

அதே போல், தற்போது வாட்ஸ்அப்பில் ‘ஏஜென்ட் ஸ்மித்’ என்ற வைரஸ் ஸ்மார்ட் போனைத் தாக்கி வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஸ்மார்ட்போன்களை பலவற்றை இந்த வாட்ஸ்அப் வைரஸ் தாக்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்களை பாதித்த வாட்ஸ்அப் வைரஸ்!!

இந்தியாவில் மட்டும் 1.5 கோடி ஸ்மார்ட்போனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின்படி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யும் போது, விளம்பரங்கள் வந்தால், அந்த ஸ்மார்ட்போனில் வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது 

வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்த வருடத்திலிருந்தே விளம்பரங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது ஏஜென்ட் ஸ்மித் என்ற வைரஸ், ஸ்மார்ட்போனில் புகுந்து வாட்ஸ்அப்பில் கண்டபடி விளம்பரங்களை வரச் செய்து வருகிறது.. 

மூன்றாம் வெப்சைட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்களைப் பதிவிறக்கம் செய்யும் போது, ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் ஆப்பும் ஸ்மார்ட்போனில் வந்திருக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போனில் ஏஜென்ட் ஸ்மித் வைரஸ் வந்து விட்டது என்றால். இதிலிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க, கே7 மற்றும் ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர் மூலம் ஸ்கேன் செய்துகொண்டால் மட்டுமே ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க முடியும். 

Related posts

இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல்கள் தானாக மறைந்து போகும் புதிய அம்சம்!!

TechNews Tamil

கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றும் கூகுள் லென்ஸ்!!

TechNews Tamil

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரன் செயலி!!

TechNews Tamil