எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐ.எஃப்.ஏ நிகழ்வில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் விலைகுறித்த விவரங்களும், விற்பனை
குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

எச்.டி.எஃப்.சி கார்டுகளுக்கு 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஜியோ
சந்தாதாரர்களுக்கு ரூ.198 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு ரூ.7,200 வரை பெனிஃபிட் உண்டு.
கூடுதலாக ஜியோவிடம் இருந்து ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக், கிளியார்ட்ரிப்பிலிருந்து
ரூ.3,000 மதிப்புள்ள கூப்பன்கள் மற்றும் ஸூம்கார் வழங்கும் ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவிலான வகை – ரூ.18,599 க்கு மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவிலான வகை ரூ.19.599 க்கு விற்பனை ஆகவுள்ளது.
நோக்கியா ஸ்டோர்கள், ப்ளிப்கார்ட் மற்றும்
நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றின் மூலம் செப்டம்பர் 23 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.