Games

வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கான மொபைல்..!!

ரெட்மி கே20 மாடல் மற்ற நாடுகளில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்தியாவிலும் மற்ற ஸ்மார்ட்போன்களைவிட அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வீடியோ கேம் விளையாடுவதற்கு ஏற்ற அதிநவீன ப்ராஸசர் இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அனைத்து மொபைல்களிலும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 710தான் இருக்கிறது. ஆனால் இந்த மொபைலில் ஸ்னாப்ட்ராகன் 855 பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்திறன் மற்ற போன்களை விட சிறப்பாக இருக்கும்.

வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கான மொபைல்..!!


6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி AMOLED டிஸ்ப்ளே , 8 ஜி.பி ரேம் உடன் கேம் டர்போ 2.0வும் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க 48 எம்.பி முதன்மை கேமராவும், 8 எம்.பி மற்றும் 13 எம்.பியில் இரண்டு கேமராவும் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.

இதன்மூலம் படங்களை துல்லியமாகவும், நல்ல குவாலிட்டியிலும் எடுக்க முடியும். இருட்டிலும் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

முன்பக்கம் செல்பி எடுக்க 20 எம்.பி பாப் அப் கேமரா உள்ளது. இந்த ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃப்ளேம் ரெட், கார்பன் ப்ளாக் மற்றும் க்லேசியர் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

6 ஜி.பி ரேம் (128 ஜி.பி போன் மெமரி) கொண்ட மாடல் 27,999 ரூபாயும், 8 ஜி.பி ரேம் (256 ஜி.பி போன் மெமரி) கொண்ட மாடல் 30,999 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவால் பலியானவர்களுக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்ட பப்ஜி கேம்!!

TechNews Tamil

ஜாலி ஜாலி வந்துருச்சு.. அனைவரும் எதிர்பார்த்த புதிய கேமிங் போன்!

TechNews Tamil

விரைவில் ஆன்லைன் கேம் பிரியர்களுக்கான லெஜியான் போன்!!

TechNews Tamil