Information Technology

விளம்பரங்களைத் தடை செய்த கூகுள் க்ரோம்!

கூகுள் க்ரோம் பயன்படுத்தும்போது நம்மை தர்மசங்கடப்படுத்தும் விஷயங்களில் முக்கியமானவை, தேவையற்ற, ஆபாசமான விளம்பரங்கள் வருவதுதான். இந்த விளம்பரங்களைத் தடை செய்ய புதிய அப்டேட் கொண்டுள்ளதாக அறிக்க வெளியாகியுள்ளது.

மொசெல்லா, சபாரி, இன்டெர்நெட் எக்ஸ் ப்ளோரர் போன்ற சாப்ட்வேர்களைவிட கூகுள் க்ரோம் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

விளம்பரங்களைத் தடை செய்த கூகுள் க்ரோம்!

இதனால் கூகுள் க்ரோம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானது. இப்போது நம்பர் ஒன் பிரவுசர் இடத்தில் கூகுள் க்ரோம் தான் உள்ளது. எனினும், க்ரோமில் வரக்கூடிய விளம்பரங்கள் பெருந்தொல்லையாக இருந்து வந்தது.

விளம்பரங்களுக்கு அளவே இல்லாத வகையில்,வெப்சைட் முழுவதும் விளம்பர லிங்க் வரத் தொடங்கியது. ஏதேனும் வெப்சைட்டில் ஒரு க்ளிக் செய்தால், மூன்று நான்கு டேப் ஓபன் ஆகி விளம்பரங்கள் ஓபனாகியது.

இந்த நிலையில், தற்போது கூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டில் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வசதி கொண்டு வரவுள்ளது. குறிப்பாக ஆபாசம், முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் இனி பிரவுசிங் செய்யும் போது வராது.

ஒரு வேளை விளம்பரங்கள் வரும் பட்சத்தில், கூகுள் க்ரோம் நோட்டிபிக்கேஷன் ஒன்றை காட்டும். அதில், This site shows intrusive or misleading ads என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பயனர்கள் விருப்பத்துடன் அனுமதித்தால் மட்டுமே அது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வரும். இதற்கு க்ரோமில் Three Dot > Help > About Google Chrome > Update என்ற பகுதிக்குச் சென்று கூகுள் க்ரோமை அப்டேட் செய்ய வேண்டும். 

எனவே, இனி விரைவில் பயனாளர்கள் எந்த ஆபாச விளம்பரத் தொல்லையும் இன்றி சர்வ சாதாரணமாக பிரவுசிங் செய்து கொள்ளலாம். விளம்பரங்களை முழுமையாக கட்டுப்படுத்த கூகுள் க்ரோமல் ‘Ad Block’ என்ற சிறப்பு செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Related posts

Flipkart Sale: 1000 முதல் 10,000 வரை தள்ளுபடி!

TechNews Tamil

திடீரென வேலிடிட்டியினைக் குறைத்த பிஎஸ்என்எல்!

TechNews Tamil

பி.எஸ்.என்.எல் பிரிபெய்ட் பிளானில் 100 ரூபாய் விலைகுறைப்பு!!

TechNews Tamil