தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல ஆஃபர்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் புத்தாண்டை ஒட்டி ஜியோ நிறுவனம் புத்தாண்டு 2020 என்ற ஒரு ஆஃபரை அறிவித்தது.
அதாவது 2020 ரூபாய்க்கு பல வகையான அம்சங்களைக் கொண்ட ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.
அதாவது இந்த 2020 ஆம் ஆண்டு ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.2020 செலுத்தினால் 12 மாதம் அதாவது ஒரு வருடத்திற்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது ஒரு வருடகாலத்திற்கு இலவச கால், தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப் சேவைகள் போன்றவற்றினை வழங்குகிறது.
பலரும் இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு அளித்துவந்த நிலையில், ஜியோ தற்போது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை வெளியிட்டு உள்ளது.
அதாவது ஜியோவின் இந்த சேவையானது இனி பயன்பாட்டில் இருக்காது என்றும், தற்போது நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தது.
ஜியோவின் இந்த திடீர் அறிவிப்பால், பயனர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகினர்.