Mobile

மிகக் குறைந்த விலையில் வரவுள்ள விவோ ஒய் 90 ஸ்மார்ட்போன்!

விவோ ஒய் 90 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

. விவோ நிறுவனம் கடந்த மாதம் 12,490.00 ரூபாய்க்கு விவோ ஒய் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதில் 5000 mAh பேட்டரி, செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரிப்பிள் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 9.0 பை, 4ஜிபி ரேம், 32 ஜிபி ரோம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தன. 

மிகக் குறைந்த விலையில் வரவுள்ள விவோ ஒய் 90 ஸ்மார்ட்போன்!



இந்நிலையில், ஆரம்ப விலையில் புதிதாக விவோ ஒய்90 ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் அறிமுக தேதி குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்குள்ளாக விவோ ஒய்90 போனின் விலை, சிறப்பம்சங்கள், போட்டோக்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

அதன்படி மீடியா டெக் பிராசசர் இதில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை மிகமிக குறைவாக வெறும் 6,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகிறது. விவோவின் புதிய ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இதுவே மிகக்குறைந்த விலை கொண்ட போனாக இருக்கலாம். 

விவோ ஒய்90 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் திரை, 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரெஜ், மீடியா டெக் A22 சிப் செட், 4030 mAh பேட்டரி, கருப்பு, கோல்டு நிறம் என அட்டகாசமாக உள்ளது.

Related posts

இந்தோனேஷியாவில் அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

தள்ளுபடி விலையில் Samsung Galaxy A80!

TechNews Tamil

ரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.!

TechNews Tamil