நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள்,
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளையும்
அங்கு பயிலும் மாணவர்களின் சமூக வலைதளக் கணக்குகளையும்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த தகவலை நாடு
முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளதுடன், அதிகாரப் பூர்வ அறிக்கையை அனுப்பியுள்ளது. இனி மாணவர்களின்
தகவல்களை கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலம் மத்திய அரசு பெற்றுவிடும்.

இதன்மூலம் துறை சார்ந்த பணிகள் பற்றி அரசு தெரிவிக்க
விரும்புவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களின்
அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து வாரத்துக்கு
ஒரு பதிவாவது வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைதள கணக்கு
இல்லாவிட்டால் புதிதாகத் தொடங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து
சமூக வலைத்தள கணக்குகளும் ஜீலை 31ஆம் தேதிக்குள் மனிதவள
மேம்பாட்டுத் துறையின் சமூக வலைத்தள பக்கங்களுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மாணவர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதன்மூலம் வேலைவாய்ப்பினை அதிகரிக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்களுடைய ஐடியை அரசாங்கம் கண்காணிக்குமோ என்று மாணவர்கள் புலம்பி வருகின்றனர்.