எலன் மஸ்க்-ன் நியூரோடெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெகுவிரைவில் மனித மூளையில் சாதனங்களை பொருத்த முடியும் என நம்புவதாக கடந்த செவ்வாயன்று அறிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 4 மிமீ × 4 மி.மீ. என்ற அளவில் இந்த சிறிய
சிப்கள் நெகிழ்வுத்தன்மை கொண்ட சிறு எலக்ரோடு இழைகளை பயன்படுத்தி,மனித மூளையில் உள்ள
நியூரான்கள் அல்லது நரம்புசெல்களை தூண்டுவதன் மூலம் மற்ற செல்களை தொடர்பு
கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எலக்ட்ரோட் இழையும் துல்லிய ரோபோட்-ஐ பயன்படுத்தி, LASIK கண் அறுவைசிகிச்சை போல பாதுகாப்பான மற்றும் வலியில்லா செயல்முறை மூலம் உட்செலுத்தப்படும் என்கிறார் மஸ்க்.
“இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை போல இல்லை. லேசிக் வகை சிகிச்சைக்கு சமமானதாகும்” என்று அவர் கூறினார். இந்த எதிர்கால அமைப்பிற்கான ஒப்புதலை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திலிருந்து பெற அதிகநேரம் எடுக்கும் என என்கிறார் மஸ்க்.
அல்ஜீமர் அல்லது பார்கின்சன் நோய் போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்ய இந்த கருவியை பயன்படுத்தப்படலாம் என்று கூறும் மஸ்க், இதன்மூலம் மூளை செயல்பாடுகளை பாதுகாப்பதுடன் மேம்படுத்தவும் முடியும் என்கிறார். மற்ற எலக்ட்ரோட் சிமுலேட்டிங் சிஸ்டம்களை காட்டிலும் நியூராலிங்க் சிப்கள் 1,000 மடங்கு அதிக திறனுடையதாக இருக்கும் என்கிறார்.