பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது 5ஜிபி இலவச இணைய சேவையை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த 5ஜிபி இலவச டேட்டா சேவைக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகத்தை பி.எஸ்.என்.எல் வழங்கும். அதைத் தாண்டும் பட்சத்தில் 1 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தைப் பெற முடியும்.
இந்த 5ஜிபி இலவச இணைய சேவை என்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் பொருந்தும். 5ஜிபி டேட்டாவுக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகமும், அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் கிடைக்கும்.

இந்த குறுகிய கால சேவை என்பது பி.எஸ்.என்.எல் லேண்டு லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை கிடைக்கும்.
இந்த இலவச சேவைக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணம் எதவும் பெறப்படாது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், சொந்த மோடம்-ஐ வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், முதன்முறையாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த மாதத்தின் 31 ஆம் தேதி வரை, இலவச சேவை வழங்கப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது முறையாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இன்னும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.