விவோ நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக Z சீரிஸ் ஸ்மார்ட்போனை ஜூலை 3ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த மொபைலின் பெயர் Vivo Z1 Pro தான் ஆகும்.
இதில்
ஸ்னாப்டிராகன் 712 AIE பிராசசரும், 5000
mAh பேட்டரி சக்தியும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கும், 32
மெகா பிக்சல் இன் டிஸ்ப்ளே கேமரா உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களும் உள்ளன.
இந்நிலையில், இன்று
மதியம் விவோ Z1 Pro ஸ்மார்ட்போன் இன்று ஆன்லைனில்
விற்பனைக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் இதனை பிளிப்கார்ட் மற்றும்
விவோவின் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெற்றுக் கொள்ளலாம்.

21 நாட்கள் தொடர்ந்து இயங்கும்
பேட்டரி, 40 மணி
நேரம் வரையில் நீடிக்கும் வாய்ஸ் கால், 13 மணி நேரம் தொடர்ந்து யூடியூப் பார்க்கும் வகையில் பேட்டரி
சக்தி, பிராசசர்
தரமமானதாக உள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில், 32 மெகா பிக்சல் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா
கொண்டு உள்ளது. பின்புறத்தில் 16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் பொக்கே என ட்ரிப்பிள் கேமரா
உள்ளது.
விவோ Z1 Pro
ஸ்மார்ட்போன் மொத்தம்
மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 14,990
ரூபாய். 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்டதன் விலை் 16,990
ரூபாய், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி உள்ள போனின் விலை 17,990
ரூபாய் ஆகும்.