தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் ரயில் அக்டோபர் 4 முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இது தற்போதைக்கு லக்னோ முதல் டெல்லி வரை மட்டுமே இயங்குகிறது. இந்த ரயில் ஏறக்குறைய விமானத்தில் உள்ளது போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டதாக உள்ளது.
.ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.25 லட்சம் பயண காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இரண்டாம் கட்டமாக அகமதாபாத் முதல் மும்பை சென்ட்ரல் வரை ஜனவரி 17ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது தேஜாஸ் நிறுவனம் பொழுதுபோக்கிற்காக புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தனியார் ரயிலில் பயணிகளின் இருக்கையில் சிறிய டிவி டிஸ்பிளே அமைக்கப்பட்டது.

அதன்பின்னர் தேஜாஸ் நிறுவனம் இருக்கையிலிருந்த டிவி டிஸ்பிளேகளை நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
தற்போது தேஜாஸ் மீண்டும் ஒரு சேவையினை வழங்கியுள்ளது. அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப்களை பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் வைஃபை சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
அதாவது மேஜிக் பாக்ஸ் என்ற புதிய வசதியை வழங்க உள்ளது. இந்த மேஜிக் பாக்ஸ் மூலம் வைஃபை நெட்வொர்க்கினை பயணிகள் பயன்படுத்த முடியும்.