Mobile

தங்கம், வைரத்தினால் செய்யப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ

தங்கம் மற்றும் வைரத்தால் ஆன ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் என்பது தான் சியோமியின் கொள்கை. தற்போது புதிதாக தங்கம், வைரத்திலான ரெட்மி K20 Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளளது.

இதற்கு Redmi K20 Pro Signature Edition என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி செலவு மட்டும் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும். 

தங்கம், வைரத்தினால் செய்யப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் தங்கத்திலான பேக் கவர் உள்ளது. இது வெறும் தங்க முலாம் பூசப்பட்டது இல்லை. ஒரிஜனல் தங்கத்திலான கவர் ஆகும். அதன் கீழ் பகுதியில் ‘K’ என்ற ஆங்கில எழுத்து வைர கற்களால் பதிக்கப்பட்டுள்ளது. 


சாதாரண ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள் தான், தங்கத்திலான போனிலும் உள்ளது. அதாவது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசசர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, அமோலெட் டிஸ்ப்ளே, 20 மெகா பிக்சல் பாப்அப் கேமரா, 4000 mAh பேட்டரி, 27W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ்,ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் ஆகியவை உள்ளது. 

Related posts

சிறப்பான அம்சங்களுடன் வெளியான விவோ Y51A ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஹானர் 9X மற்றும் 9X ப்ரோ உடன் பட்ஜெட் Smart TV அறிமுகம்!

TechNews Tamil

இங்கிலாந்தில் அறிமுகமானது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போன்!!

TechNews Tamil