ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு போட்டியாக டிக் டாக் நிறுவனம் புதிய சேவையை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில், க்ரிட் ஸ்டைல் லேஅவுட், அக்கவுண்ட் ஸ்விட்ச்சர், டிஸ்கவர் பேஜ் போன்ற அம்சங்களை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியிருந்தது. அதேபோல் தற்பொழுது டிக்டாக் செயலியிலும் இதுபோன்ற சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டிக்டாக் நிறுவனம் க்ரிட் ஸ்டைல் லேஅவுட் சேவையின் கீழ் தனது செயலியைச் சோதனை
செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிக்டாக் செயலியில், பல புதிய அம்சங்களை
வழங்குவதற்காக டிக்டாக் செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது. அத்துடன் பயனர்களின்
அனுபவத்தை மேம்படுத்தப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டிக்டாக் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி 28
சதவிகித இன்ஸ்டால்களை
உலகளவில் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் , இந்த டிக்டாக் செயலியை 70 கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.