Apps

கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேடும் வசதி….

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது பொது கழிப்பறைகளை தேடித்தரும் பணியை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. கூகுள் மேப்ஸ் மூலம் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகளின் இருப்பிடங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ஆற்றிய உரையில் இந்த அம்சத்தை அவர் குறிப்பிட்டார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். மேலும் கழிப்பறை லொக்கேட்டர் என்ற அம்சம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான ஒரு நல்ல அம்சம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேடும் வசதி….

இந்தியாவில் 1700 நகரங்களில் 45,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகள் கூகிள் வரைபடங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவின் நகர்ப்புற மக்களில் 53% க்கும் அதிகமானவர்களை பொது கழிப்பறையை கண்டுபிடிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பயனாளி பெட்ரோல் நிரப்பும் இடங்கள், உணவகங்கள், மால்களைத் தேடுவது போல் நேரடியாக “கழிப்பறை” என்று கூகுள் மேப்ஸில் தேடினால் போதுமானது.

திறந்தவெளி கழிப்பறையை தடுக்க அரசுகள் முயற்சித்து வரும் நிலையில் இந்த அம்சம் நம் நாட்டிற்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் மேலும் கூறியபோது, ‘2019 அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் நாடு திறந்த வெளி கழிப்பறை தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related posts

ஏர்டெல்: ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைம் இலவசம்!!

TechNews Tamil

தென்கொரியா, சிங்கப்பூரினை அடுத்து இந்தியாவிலும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்!!

TechNews Tamil

வாட்ஸ்அப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட்!!

TechNews Tamil