Mobile

ஓப்போ கே3 : இப்படியும் ஒரு அறிமுக அதிரடி சலுகையா!

ஓப்போ கே3 அறிமுக சலுகையாக முதல்நாள் மட்டும் குறைந்த விலையில் மொபைலை விற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.


6.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்ட்ராகன் 710 பிராஸசர் கொண்டது. பின்பக்கம் 16 எம்.பி மற்றும் 2 எம்.பியில் இரண்டு கேமராக்களும். முன்பக்கம் செல்பி எடுக்க ட்ரிகர் மாடலில் 16 எம்.பி கேமராவும் உள்ளது. ஃபுல் ஹெச்.டி AMOLED டிஸ்ப்ளே உள்ளது. கைரேகை சென்சார் ஸ்க்ரீன் உள்ளது. இதனால் ஸ்க்ரீனில் கைவைத்தாலே அன்லாக் ஆகும்.

ஓப்போ கே3 : இப்படியும் ஒரு அறிமுக அதிரடி சலுகையா!



இந்த மாடல் 6 ஜி.பி ரேம் 64 போன் மெமரியிலும், 8 ஜி.பி ரேம் 128 ஜி.பி போன் மெமரியிலும் கிடைக்கிறது. இதன் முதல்நாள் விற்பனை வரும் ஜூலை 19 வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. அன்றைக்கு அமேசான் மூலம் மட்டுமே இந்த மொபைலை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

மொபைல் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த மொபைலின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் 6 ஜி.பி ரேம் கொண்டது 16000 ரூபாய் முதல் 17000 ரூபாய் இருக்கலாம் எனவும், 8ஜி.பி ரேம் கொண்டது 21000 முதல் 22000 வரை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஜியோனி அறிமுகம் செய்துள்ள மேக்ஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் இப்படி ஒரு வசதியா.!

TechNews Tamil

மூன்று கேமிராக்களுடன் களமிறங்கும் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2!

TechNews Tamil