ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. ஆகிய மாடல்களின் விற்பனையை நிறுத்தவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.
ஆனால் சற்றும் எதிர்பார்க்காத விதமாக, தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ்,
ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற
மாடல்களின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட ஐபோன் மாடல்கள் எல்லாம் பழைய மாடல்களாக ஆனநிலையில் அதை
திரும்பி பெற்றுக்கொள்வதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் பிரீமியம் ஐபோன்
மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
விற்பனை நிறுத்தம் பற்றிய தகவல் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாம். ஆனால் பழைய மாடல்கள் ஆனதால் நிறுத்துகிறோம் என்ற காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என் கின்றனர் மக்கள்.
ஐபோன் விரும்பிகள் ஐபோனின் அடுத்த வெர்சனை நோக்கி காத்திருக்கின்றனர். இந்தச் செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.