தற்போது ஈபிஎஃப் உறுப்பினர்கள் அவர்களது ஈபிஎஃப் தொகையைப் பெறுவதற்கு அவர்களுடைய முதலாளியையோ அல்லது ஈபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரியையோ சென்று பார்க்க வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே தாக்கல் செய்து தீர்வுக் காணலாம்.
ஈபிஎஸ் மற்றும் ஈபிஎஃப் பணத்தை ஆன்லைனில் பெறுவது எப்படி?
1. உறுப்பினர்களுக்கான யுஏஎன் இணையதளத்தில் சென்று உள்நுழைந்து உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள். (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)
2. ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் “ஆன்லைன் சேவைகள்” என்கிற தேர்வை தேர்ந்தெடுக்கவும்.

3. பதிவு செய்யப்பட்ட கேஒய்சி விவரங்கள் சரியா அல்லது தவறா என்று சோதிக்கவும்.
4. கொடுக்கப்பட்டுள்ள மூன்று தேர்வுகளில் பணத்தை எடுக்க நீங்கள் விரும்பும் தேர்வைத் தேர்ந்தெடுத்து பின்னர் வேண்டுகோளைச் சமர்ப்பியுங்கள். (i) முழுமையான வருங்கால வைப்பு நிதி தீர்வு (ii) பகுதியாக பிஎஃப் தொகையை எடுத்தல் (கடன் / முன்பணம்) (iii) ஈபிஎஸ் தொகையை எடுத்தல்
5. யுஏஎன் உடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி ஆன்லைன் பிஎஃப் தாக்கலை சரிபார்க்கவும். ஓடிபி யை உள்ளேயிட்டு பணத்தைப் பெறுவதற்கு சமர்பிக்கவும்.
6. ஈபிஎஃப்ஓ உங்கள் கேஒய்சி
விவரங்கள் அதாவது ஆதார் எண் விவரங்களை யுஏடிஐ தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளும்.
பிறகு உங்கள் ஆன்லைன் பிஎஃப் தாக்கல் செயல்படுத்தப்படும், தாக்கலுக்கான பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும்.