Mobile

இரண்டே நாட்களில் விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ எஸ்10இ ஸ்மார்ட்போனை செப்டம்பர் 9 ஆம் வெளியிட உள்ளது. இந்த விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி, 1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொண்டுள்ளது.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் 2.44ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இரண்டே நாட்களில்  விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 64எம்பி மெயின் கேமரா, 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவு  கொண்டுள்ளது.

விவோ எஸ்10இ ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் 3970 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

ஜனவரி 25 ஆம் தேதி நோக்கியா கூறவுள்ள நற்செய்தி!!

TechNews Tamil

ஐரோப்பாவில் நோக்கியா டி20 டேப்லெட் வெளியீடு!

TechNews Tamil

ஜெர்மனியில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil