கூகுள் நிறுவனம் பல புதிய அப்டேட் கொண்டு வந்தது கொண்டே இருக்கிறது, அந்த வகையில் கூகுள் மேப்பில் மக்கள் பயனடையும் வகையில் பல புதிய தகவலை கொண்டு வந்தது.
சமீபத்தில் கூகுள் மேப்பில் AR நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட் டிராப் மற்றும் நீங்கள் செல்லும் வழியியில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதையும் நீங்கள் இங்கு எளிதாக அறியலாம்.
SOS அலர்ட்ஸ் ஐ மேம்படுத்துவதற்காக கூகுள் , தற்போது இயற்கை பேரழிவுகள் பற்றி காட்சி தகவல்களை சேர்ப்பது, மற்றும் ஒரு புதிய வழிசெலுத்தல் எச்சரிக்கை அமைப்பு கூகுள் மேப்பில் சேர்த்துள்ளது.

இந்த அப்டேட் மூலம் ஒரு இயற்கை பேரழிவின் போது உங்கள் உயிரையும் காக்கும் மேலும் பூகம்பங்கள், சூறாவளி, மற்றும் வெள்ளங்கள் பற்றி விரிவான காட்சி தகவலை முன்னறிவிப்பாக பயனர்களுக்கு காண்பிக்கும்.கூகுள் sos எச்சரிக்கைகள் ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அவசியமான தகவலை விரைவாக வழங்குவதற்கான ஒரு வழியாகும்.
இதன் மூலம் நீங்கள் என்ன நடக்கிறது, தொடர்புடைய செய்திகள், அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வலைத்தளங்கள், உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து ட்விட்டர் புதுப்பிப்புகள் மற்றும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு வழியை கண்டுபிடித்து, பாதுகாப்பைப் பெற உதவும் உதவிக்குறினைப் பெறலாம்.