கூகுள் குரோம் வெப் பிரவுசரில் உள்ள இன்காக்னிடோ மோடில் ஒரு லூப்ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்காக்னிடோ மோடில் சர்ஃப் செய்யும் எந்த வலைத்தளமும் பிரைவேட் ஆகாது.
கூகுள் குரோம் பயனராக இருந்தாலும் சரி, மொஜிலா ஃபாக்ஸ் பயனராக இருந்தாலும் சரி, அனைவரும் இன்காக்னிடோ மோடு சேவையைப் பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. Browse Invincible என்ற இந்த வார்த்தை தான் அனைவரும் இன்காக்னிடோ மோடு சேவையை பயன்படுத்த ஒரு முக்கிய காரணம்.

இன்காக்னிடோ மோடு சேவையைப் பயனர் பயன்படுத்தும் பொழுது, பிரவுசர் ஹிஸ்டரி போன்ற தகவல்கள் சேமிக்கப்படமாட்டாது, அதேபோல் வலைத்தள கேச்சி(cache) மற்றும் குக்கீஸ்(cookies) உங்கள் சாதனத்தில் சேவ் ஆகாது என்ற காரணத்தினாலும், முக்கியமாக பிரைவேட்டாக இணையம் பயன்படுத்தலாம் என்பதனாலும் மட்டுமே இன்காக்னிடோ மோடைப் பயன்படுத்துகிறோம்.
இந்த லூப்ஹோலால் பிரைவேட் பிரவுசிங்கா அல்லது சாதாரணமாக பிரவுசிங்கா என்பதை பயன்படுத்தும் இணையதளங்களால் கண்டறியமுடியும் என்பதே உண்மை. இதுவரை இன்காக்னிடோ மோடில் செய்துவந்த அனைத்து செயல்களும் பிரைவேட் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இன்காக்னிட்டோ மோடில் உள்ள லூப்ஹோல் மூலம் ஆபாச இணையதளங்கள் பயனாளர்களின் தகவல்களைச் சேகரித்து மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அவற்றை விற்கின்றன என்று தெரியவந்துள்ளது.
கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 30 ஆம் தேதி வரவிருக்கும் குரோம்76 அப்டேட்டில் இந்த இன்காக்னிடோ மோடு லூப்ஹோல் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.